Posted in #SriScribbles, Book Talks

The House that BJ Built by Anuja Chauhan

A gift, a birthday gift from a friend who drove one and half hour right after his night shift work to meet. Though, I have not been a person who go abuzz on every birthday for the past few years, but there are always certain things that make any day to be cherished forever. Siva coming in person was indeed one such thing.

 

Though I wanted to read this book much earlier after I received it, there was this concept of me that doesn’t make up to read books until I am finished with the current one. The House that BJ built was an Indian fiction book after a long time. And, this is the first time I have read of Anuja Chauhan (Being an accidental reader always!). Later did I learn that it is a sequel, a sequel that can be read without having to go through the first part. The briefing in the book gave me a 50 -50 thought on the book.

 

TheHouseThatBJBuilt

 

The book welcomed with a Hindi English dialect used which I did least expect (Yes, most English book on Indian geography do have this combination of native language wherever possible). Though, initially it seemed odd, as the story evolved the usage seemed so in sync with the story. The story revolves around young Bonu who lives with her grandfather in one of the most sought out places in Delhi. The story develops over a variety of characters ranging from a fresh hit director for whom Bonu has an undisclosed liking and his troubles with his latest film, alphabetically named aunts and her prejudiced thoughts on them, Trings of annexure with whom only Bonu is found to be in a good rapport, a rehabilitated successful builder, a troubled second family.

 

The overall experience of the book gives you a Hindi family drama movie feel. (Who knows it can be made into one!). The dialects used adds a funny relevance to the drama. The biggest plus of the book lies in its vast characterization for a simple family story and the flow. The story gives an insight into the upper class societal and family life (Which I am not much aware of in person, so believe it to be). The clashes over money, property, prejudices and conspiracies that built the simple looking complex family life is what the book carries in a simple form.

 

Of all the characters, Samar the sensible aspiring director (until a brawl in the road, which for me looked more filmy) and Bonu who is a combination of past childhood emotions, lone bringing up and a self-developed life has a character of their own. The way she fights over just to keep her intact and to prove that she is in no way lesser to others does have a strong touch to it.  Most scenarios in the storyline reflect the sweet bitter existences of most relationships in a family. The conspiracies, stories and interpretations on past instances make the story build and does show how assumptions can leave people in a constant state of confusion and uncertainty.  The story does indeed give an insight over how family relationships revolve in an economically and societally settled families.

 

Overall, an easy and light read with a hefty Bollywood touch and few clichés is what the house provides. It will definitely remain one of those leisurely read as a pass time for lot of people. Nevertheless the gift part will have a special part for this book in my shelves.

 

#TheHouseThatBJBuilt – Built family life in a Bollywood touch

Posted in #SriScribbles, Book Talks

வில்லோடு வா நிலவே – வைரமுத்து

 

நான் முழுமையாக படித்த முதல் சரித்திர புதினம் என்று தான் சொல்ல வேண்டும் வில்லோடு வா நிலவை. வரலாறு என்பது என்றுமே புரியாத புதிர் தான். கிடைத்திருக்கும் புள்ளிகளைக் கொண்டு அவரவருக்கு ஏற்றார் போல், சித்திரம் வரையக் கூடிய ஆற்றல் வரலாற்றுக்கு என்றும் உண்டு. அதில் “வில்லோடு வா நிலவே” விதிவிலக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

 

villoduvailave

 

வைரமுத்துவின் சொல் ஆளுமை பற்றி தனியாக பேச தேவையே இல்லை. உரைநடையும் கவிதையும் ஒன்றோடு ஒன்று கலந்தது போல ஒரு உணர்வை நிச்சயம் தரக்கூடியவை “வில்லோடு வா நிலவே”. வரலாற்றுப் புதினம் என்றவுடன் மனதில் எழும் அரசாட்சி முறையும், என்னில் அடங்கா போர்களும் தான்.. ஆனால், அவற்றைக் சுருக்கி, இளவரசன் ஒருவனின் காதல் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி அதனூடே சேர அரசின் தடங்களை தொட்டு செல்கிற ஓடையாகவே இருக்கிறது இந்நூல். புத்தகத்தின் பெயரே கூட இதை சொல்லாமல் சொல்கிறது. வரலாறு எனும் பார்வையில் காட்டாறை எதிர் நோக்குபவருக்கு மெல்லிய ஓடையையே தருகிறது இந்நூல்.

 

சேரப் பேரரசு பரந்து விரிந்து இருந்த காலகட்டத்தில் பயணமாகிறது கதைக்களம். சேரர்களுக்கும் கடம்பர்களுக்கும் இருந்த பகை, யவன (Greek) – அரேபிய நாடுகளுடன் இருந்த வணிகம், சேர நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் செழிப்பு ஆகியவற்றை அழகுடன் கூறியிருக்கிறார் வைரமுத்து. தொண்டி , வஞ்சி என இரு பெரு நகரங்களும்., தொண்டியை இளைய மன்னனாகிய சேரலாதனும், வஞ்சியின் மாமன்னனாக அண்ணன் செங்குட்டுவனும் ஆண்டு வந்த காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகளின் கற்பனை மிகுந்த தொகுப்பே இந்த நூல்.

 

காதலை அழகாய் காட்டிய நூல் என்று பலரும் புகழ்ந்த நூல் ஆயினும், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று வர்ணிக்கும் இடங்களில் ஏனோ ஒரு வித இனக்கவர்ச்சியையும், ஆதிக்கத்தையுமே மேலோங்க சொல்வதை மறுக்க முடியவில்லை.தனி ஆளுமையாக இருக்கும் பெண்ணொருத்தி, காதலில் விழுந்த நேரம் நிழலாக மாறுவது போன்ற வர்ணனைகள் பலவற்றுடன் உடன்பட முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திகட்டும் அளவிற்கான பெண்பால் சார்ந்த வர்ணனைகளும், இலக்கணங்களும் மிகுந்தே பயணிக்கிறது வில்லோடு வா நிலவே. வரலாறு என்ற பொழுதே வர்ணனைகள் தவிர்க்க முடியாதது என்றாலும், ஒரு தலைபட்சமாக காதல் சார்ந்த வர்ணனைகள் வரலாறை மிஞ்சிய நிலையில் சற்றே திகட்டுகிறது. இன்றளவில் காதல் திருமணம், திருமணத்திற்கு முன் கலவியில் ஈடுபடுதல் போன்றவை கலாச்சாரக் கேடு என்று கலாச்சாரக் காவலர்கலாய் சுற்றுவோர் வரலாற்றில் வரும் நிகழ்வுகளை (கற்பனை கலந்ததே எனினும்) சற்று படித்தால் நலம்.

 

தமிழ் மன்னர்களின் பெருமை என்று முகப்புரை வழங்கி தொடங்கும் கதை களம் சில வியப்புகளையும், சில கேள்விகளையும் தராமல் இல்லை. நான்கு வருண மரபும் அதன் தாக்கமும் மிக முக்கிய பங்கு வகுக்கிறது கதையசைவில். வருணப் பாகுபாட்டைக் கேள்விக்கு உட்படுத்தும் அதே நேரம், அதே பாகுபாட்டை வேறு வகையில் பறைசாற்றும் நிலையிலே பயணிக்கிறது வில்லோடு வா நிலவே.கதையின் முடிவில்லா முடிவு, வருண பாகுபாட்டின் இன்றைய நிலையுடனும் ஒப்ப முடிகிறது.

 

எல்லாவற்றையும் கடந்து தமிழ் ஆளுமையும், கதையோட்டமும், தூவப்பட்டிருக்கும் சிறு வரலாறும் பல கேள்விகளையும் தேடல்களையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

#வில்லோடுவாநிலவே – நிலவில் மறைக்க முயன்ற வில்

Posted in #SriScribbles, Book Talks

The Associate by John Grisham

Fictional books have a way of portraying plots with a blend of imagination and reality. The reality comes from an influence of people and circumstances around you. The reality part can also be misleading at times, but I believe in things that a reader relates really counts.As like my all other write ups on movies, books and travel., this is an inference and experience that I got out of reading the book.

 

the-associate

 

The Associate is a easy read as a novel with no much complication in plot or the flow. The plot remains as much streamlined as possible. The novel starts with a good detailing on the protagonist Kyle McAvoy and people around him. As the plot moves, the character evolves as most of us do. But as a story, when people expect answers to questions raised in the story during the climax, Grisham leaves it otherwise. The final part almost rushes to a halt.

The story of a young law graduate, an unexpected blackmail, forcing into doing something out of his character forms the base of the plot. Through the story line, there are a few things used for depth of the character and backdrop which anyone from a corporate work backdrop can infer. From a law graduate who wants to persuade public services, ending up in a corporate law firm as a result of blackmailing, The plot very much makes a satire of the happenings at a corporate firm(this can be related to any corporate firm, leave alone law firms). Some of the instances like making a graduate to just run copiers for months, search for journals in a dumped library, bill clients no matter what, work day and night without the slightest hint of what really happens and overall the fancy perks like weekend parties, theoretical offers and sophisticated work areas which almost makes any young graduate to forget all other tough times and propel into something that never makes sense personally. All these relates to all employees at any corporate firm. Through the plot of a thriller, Grisham has very well captured the absurd happenings of a fresher at a corporate firm.

The other part, that cooks the whole story up is the vigilance employed by an unidentified group over even the most common of a man. Though fictional, there are instances around us that make it at the least half true. These really does make people wary of all those conspiracy theories.

With these in backdrop, the plot travels easily from a young simple law graduate to a thinking, complicated intern at a corporate firm through blackmails, espionage and extortion happening in parallel.

Overall, The Associate is definitely a easy read with it’s own share of inference and adrenaline.

#TheAssociate – The corporate Espionage

Posted in #SriScribbles, Book Talks

அணிலாடும் முன்றில் – நா. முத்துகுமார்

பல நாட்களாக புத்தகத்தின் பெயரின்பால் கொண்ட ஈர்ப்பினாலே படிக்க வேண்டும் என்று விரும்பிய புத்தகம், நா.முத்துகுமாரின் “அணிலாடும் முன்றில்”. ஒரு வழியாக இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி, சில நாட்களுக்கு முன் படித்து முடித்தேன்.. புத்தகத்தை படிக்கும்பொழுதும் படித்த பின்பும், முத்துகுமாரின் இழப்பை பற்றிய சிந்தனைகளும், அவருடைய எழுத்தில் உள்ள வாழ்க்கையின் உயிரோட்டமும் ஒரு வித சிலிர்ப்பை தந்து கொண்டே இருக்கின்றது.

 

நிகழ்வுகளாய், கதைகளாய், கவிதைகளாய் ஒவ்வொரு உறவையும் வாழ்க்கையின் ஓட்டத்தையும், அவற்றில் உயிர்ப்பை தருகின்ற உறவுகளையும் மிகவும் அழகோட உரையாடும் களமாக அமைந்திருக்கிறது இந்த அணிலாடும் முன்றில்.. உரையாடப்பட்ட உறவுகளில் சில மிகவும் கட்சிதமாக நம்முடன் பொருந்தி போகவும், சில முரணாக வேறுபட்டும், சில நாம் கடந்திராத உறவுகளாகவும் நம் நினைவுகளை தீண்டி செல்கிறது.

 

anilaadum-mundril

 

உறவுகளை விடுத்து அவரவருக்கு என ஒரு வாழ்க்கையை தேடிய ஓட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சியில் புதைந்து போன குடும்ப உறவுகளும், அவற்றின் பசுமையான நினைவுகளையும் இதமாக புரட்டி செல்கையில் ஒரு வித ஏக்கம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. தனி மனித சுதந்திரம், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான விவாதங்கள் என நீளும் பகுத்தறிவு / நவீனம் பேசும் சூழலில், உள்ளத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் உறவுகளின் பிணைப்பையும், கொண்டாட்டங்களாக ஒன்று கூடலாக அமைந்த சம்பிரதாயங்கள் தந்த நினைவுகளையும் எளிதில் புறம்தள்ளி விட முடிவதில்லை என்பதை நினைவுபடுத்துகிறது இந்த தொகுப்பு.

 

வாசிப்பு பழக்கத்தை சிறுவர்மலர் மூலமாக ஊக்குவித்த அப்பா, ஒவ்வொருமுறையும் வெளியே செல்லும்போதும் வீடு திரும்பும் நேரத்தையும் எதிர்நோக்கும் அம்மா, கண்டிப்பையும் அன்பையும் சமமாக தந்த பெரிய மாமா,அன்பும் அனுபவங்களுமாக தோழமைகளையும் தனி மனிதனாக உலாவ ஊக்குவிக்கும் சின்ன மாமா,பெரியவனாக உணரவைக்கும் மாமா அத்தைகள்,எப்போதும் எல்லா விதத்திலும் ஆதரவாகாவே அன்பைமட்டும் தரும் சித்திகள், சீதா பழமும் சப்பாத்தியும் இன்றும் பிடிக்க காரனமான அத்தைகள்,ஷூ போலிஷ் போடுவது முதல் நடை பாவனை வரை எப்படி இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்த சித்தப்பா, உறவு முறைகளின் தேவையையும் குடும்ப நிகழ்வுகளின் நினைவுகளையும் என்று தந்து கொண்டிருக்கும் சித்தப்பாக்கள்,சண்டை இடவும் அக்கறை கொள்ளவும் தங்கைகளும் தம்பிகளும், சீக்கிரம் சுயமாக செயல்படும் பெரியவனாக வேண்டும் என என்ன வைத்த அத்தான்கள், நெருக்கமும் தொலைவும் ஒன்றே சேர்ந்த அத்தை மாமாக்கள் – சித்தி சித்தப்பாக்கள் – சித்தப்பா சித்திகள்,பாசமே ஆயினும் தனக்கென தனி பாணி கொண்டு பாட்டியமாக்கள், பிடிக்குமென்று சட்டையில் லட்டு கொண்டு வந்து தரும் அப்பா தாத்தாவும், கார் ஓட்ட மடியில் விளையாட விட்ட அம்மா தாத்தாவும் என ஒவ்வொருவருடனான நினைவுகளின் ஒரு சிறு புள்ளியேனும் புத்தகம் நெடுக பயணித்ததும் அவற்றுடன் இருபதைந்து ஆண்டு காலப்பயணம் செய்ததும் ஒரு புத்துணர்வை தந்தது..

 

அணிலாடும் முன்றில் போன்ற படைப்புகளும் அவற்றுடன் பிணைந்து நிற்கும் உறவுகளின் நினைவுகளுமே இன்றும் நாம் யாவரும் இயங்கி கொண்டிருப்பதன் உந்து சக்தி என்பதே நிதர்சனம். கண்ணீரையும் புன்னகையையும் ஒரு சேர கட்டுபடுத்த முடியாமல் அள்ளித்தரும் படைப்புகள் சில, அவற்றுள் அணிலாடும் முன்றிலிற்கு தனி இடம் உண்டு. உறவுகளும் உணர்வுகளும் இருக்கும் வரை முன்றிலில் அணில்கள் ஆடிக்கொண்டே தான் இருக்கும்..

#அணிலாடும்முன்றில் – ஆனந்தம்

 

Posted in #SriScribbles, Book Talks

Kim By Rudyard Kipling

 

It has been very long since I completed reading a book, an year in fact. Kim has been with me since last August; with me through all the travel I have been to;always by my bedside every night , yet couldn’t get a real hold of the book for some strange reason.

 

kim

 

Kim, an orphaned Irish kid entering his teens roaming about the busy streets of Lahore for daily life forms the protagonist of the plot. The plot is a coming of age story of Kim as he travels across the breadth of India with coincidental and incidental experiences. Being a careless boy and raised more like any orphaned boy of then Lahore(1850s), Kim gets in contact with people of different ethnicity, culture and beliefs. The story is a straight forward travel along Kim’s life with a Tibetan Lama who he meets at Lahore and gradually considers to be his mentor.

With Kim deciding to travel with Lama as his disciple for the want of new adventures and Lama in a spiritual search of the “River of arrow”, encounter a serious of adventures that evolves them into a different person altogether is what Kim is all about. Built over the back drop of “The Great Game” between Russia and Britain in establishing power in central Asia., Kim is more of an multi- layered travelogue than a Spy novel. Having said as a travelogue, Kim captures various cultural, religious beliefs that existed side by side along the length and breadth of India from Lahore in the west to Culcatta in the east., Himalayas in the North to Benaras in the south. Kim accounts with a raw depiction of various beliefs that existed, though from a British view point.

The characterization., starting from Mahbub the Afghan, Lama the Tibetan, Hurree Chander the Bengali, the Kulu women, Lurghan sahib, Col. Creighton, the hill men, other passerby characters and the ever competiting christian piests of the Brtish regiments gives an understanding of different ideas. The description also has a stereotyped touch to it, all the time.

The Spy part of the story, starts with encounter with the Irish regiment and follows a linear plot even then. The story is too linear and even paced to be called a thriller. The transformation as a person based on various learning from various people and institution of both the Lama and Kim paces as uniform as possible with a few hurrying instances. Kim, also provides an insight on how swiftness and natural instincts play a role in becoming a spy. The plot with lot more to travel description of different peoples ( though mostly seeming like from then a dominant European mindset over the east) than spy and thrill, ends on a even more soft paced realization of Kim and the Lama.

Though, a book to go back in time and get a glimpse of India and its people (Including the British who inhabited then) of 1850s and the various spiritual , cultural aura that it offers., Kim needs patience to get along. The old fashioned English adds to the need of patience for a non native English speaker.Kim has a vague charisma to it, that repels and attracts with the same magnitude which is never too high.

#Kim – An even paced travelogue of 1850s

Posted in Book Talks

பெனி எனும் சிறுவன் – கிகோ புளூஷி (தமிழில் யூமா. வாசுகி)

ரொம்ப நாட்களாக, நான் படித்து கொண்டிருந்த ஒரு நாவல் பெனி எனும் சிறுவன்.. குழந்தைகள் இலக்கியம் படிப்பதற்கு தேவையான பொறுமையை கற்றுக்கொடுத்த மற்றுமொரு நாவல்..

அல்பேனியா நாட்டைக் கதைக்களமாக கொண்டு அமைக்க பெற்ற ஒரு எளிமையான, ஆழமான கதை “பெனி எனும் சிறுவன்”. எளிமையும், ஆழமும் ஒன்றோடு ஒன்று ஒன்றி போகுமா என்ற வியப்புகளுக்கும் கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடையளிக்கும் ஒரு படைப்பு..நாம் சாதாரணமாக எண்ணி கடந்து செல்லும் குழந்தைகளின் பல செயல்பாடுகளின் ஆழத்தை அலட்டிக்கொள்ளாமல் சொல்லியிருக்கும் விதம் அருமை..

கதையின் முற்பாதியை கடக்க கொஞ்சம் பொறுமை வேண்டுமே என்றாலும், பிற்பாதியில் நாமும் கதையுடன் ஒன்றிவிடுவது எழுத்தாளரின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.. முதலாம் வகுப்பு முடித்து விட்டு விடுமுறை நாட்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு குழந்தையின் பயணமே இந்த நாவலின் கரு.. நகர வாழ்க்கை, சுத்தம் சுகாதாரம் பாசம் என்கிற பெயரால் எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு விதிக்கும் ஒரு சாதாரண நகர வாழ் அம்மாவின் அரவணைப்பில் வாழும் ஒரு குழந்தையின் எண்ண அலைகளும் அதன் கோவம், ஆனந்தம், துக்கம், போன்றவற்றை அழகாக எடுத்து சொல்லும் ஒரு அழகான வாழ்வியல் பயணத்தை நமக்கு நிறைவாக தருகிறது இக்கதை..

குழந்தைக்கு பரிசாக, அவன் விரும்பும் பந்திற்கு பதிலாக சூட் வாங்கி கொடுக்க நினைக்கும் பொழுதுகளிலும், வெளியில் சென்று விளையாடினால் களைப்பு அடைந்து விடுவான் என்று கண்டிப்பதிலும் குழந்தைக்கு நன்மை என்ற தோற்றத்தில் ஒரு பெற்றோராக குழந்தைகளின் எண்ணங்களை சாதாரணமாக உதாசினபடுத்துவதையும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் நெருக்கடிகளையும் மிகவும் எளிமையாக ஒரு குழந்தையின் பார்வையில் கூறியிருப்பது மிகவும் நேர்த்தி..

அதிகபடியான கண்டிப்பும் செல்லமும் ஒரு குழந்தையின் தனித்துவத்தையும், எதையும் எதிர்நோக்கும் தன்னம்பிக்கையையும் எவ்வாறெல்லாம் சிதைக்கிறது என்பதை பெனியின் பார்வையில் யோசிக்கும் வேளைகளில் நாமும் நம் குழந்தை பருவத்திற்கு பயணித்து, அது போன்ற சூழலில் நாம் இருந்த மனநிலைகளை ஒப்பிட்டுக் கொள்வதை தடுக்க முடியவில்லை..

இவ்வாறான சூழ்நிலைகளில், பெனியின் ஹீரோ ஆகவும், ஊக்கமாகவும் இருக்கும் தோமா மாமா, நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத தாய்மாமாக்களை ஞாபகப்படுத்துவதை மறுபதற்கில்லை.. தனக்கு பிடித்த மாமாவுடன் பள்ளி விடுமுறைக்காக கிராமத்திற்கு பயனப்படுதலும், அங்கே உள்ள இயற்கையின் அழகில் மெய் மறந்த போவதும், நண்பர்களை கண்டு கொள்வதும், அவர்கள் மற்றும் கிராம வாழ்க்கையிலிருந்து பெனி கற்றுகொள்ளும் படிப்பினைகளும் நம்மை ஒரு அழகான உளவியல் பயணத்திற்கு அழைத்து செல்கிறது..

கூட்டுப்பண்ணை, கட்சித் தோழர்களின் சாகசம் என்று communism கு ஆதரவான பல படிப்பினைகளை மிகைபடுத்தாமல் எடுத்து சொல்லி இருக்கும் விதம் கதைக்கு கூடுதல் பலம்.. ஆயினும், இவ்வாறான நேர்முறை தாக்கங்கள் கொண்ட ஒரு நாடு communism ஐ விடுத்து சமீபகாலத்தில் ஒரு மாறுதல் கண்டிருப்பது யோசிக்க வேண்டிய ஒரு வியப்பு.. குழந்தையின் உளவியலையும் communism த்தின் நேர்மைகளையும் எடுத்து செல்லும் அதே வேளையில், “ஆண் பிள்ளைகள் பலசாலிகள், பெண் பிள்ளைகள் தான் அழுவார்கள்” போன்ற வசனங்கள், எந்த ஒரு கோட்பாடும் கலாச்சாரமும் இலக்கியமும் நூறு சதவீதம் சரியாக இருப்பதில்லை என்பதற்கான சான்று..

ஒரு குழந்தையை, தானாக வெளிபடுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி..

Posted in Book Talks

Around the World in Eighty days

Around the World in Eighty days By Jules Verne

We live in a world where we could literally connect with anyone anywhere at anytime. It just takes more or less a whole one day to traverse through the world physically and seconds to traverse it virtually. It Is always fascinating to know how people used to do the same during ages of Darwin!

Though this particular book doesn’t refer to an age of Darwin’s but certainly takes us back to late 1800s. I got to read this book accidentally as I always do. Only after I got through with the book did I came to know that it is one among the everlasting children’s classic. Ha, I smiled to myself saying that I have traveled back in time.

It takes lot of patience as an adult to read an children’s book., which I am trying to incorporate. It allows one to know the simple thought of a kid. As adults we always need lots of suspense, action and drama in a travel fiction, this book showcases how a simple thing can affect a kids world , owing to its success.Other than that during my stint with this book I never thought it as a novel intended for kids, rather an simple travelogue novel and a journey through different cultures.

A rich , reserved Englishman decides to go around the world in eighty days to win a wager without the awareness of police searching for a look alike robber is the plot of the story in a line. The travel traverses through various cultures like Europe, India, Japan, China, Americas.. It gives a mixed feeling of stereotyped description of certain race of people along with hint of social injustices around the world like suttee. Though the plot tries to view from then an dominant European mindset, the story is a good read.

One must admit that Jules Verne has done a tremendous work in the background to have drafted a complete world           tour along with description of variety of cultures around the world in a period where communication and travel technologies were on the budding level of development. Though it has certain predefined descriptions of different people, this novel would remain as an example to anyone who writes, In senses of the hardwork, passion required in the making of a journal.