Posted in #SriScribbles, Travel and Life

கோடியக்கரையும் கடலோரக் கதைகளும்

 

வார இறுதிகளில் வரும் நண்பர்களின் திருமணங்கள் கூடவே ஒரு பயனத்திட்டத்தையும் ஏற்படுத்த மறுப்பதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன், நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக செல்லும் பொருட்டு கோடியக்கரை செல்வது என முடிவு செய்தோம்.

 

தோழி ஒருவரின் வீடு கோடியக்கரையில் இருந்தமையால், திட்டமிடுவதற்கோ விசாரிப்பதற்கோ எங்களுக்கு பெரியதாய் ஏதும் இருக்கவில்லை. வேதாரண்யத்தில் தங்குவதற்கு விடுதி பதிவு செய்வதிலிருந்து, கோடியக்கரையை சுற்றுவதற்கு வாகன ஏற்பாடுவரை எந்த மெனக்கெடலும் எங்களுக்கு இருக்கவில்லை. தோழி எங்களுடன் வரவில்லை என்றாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில் கோடியக்கரையில் அவருடைய அம்மாவும், சுற்றத்தாரும் காண்பித்த அக்கறையும் உதவியும் என்றும் ஒரு நெகிழ்ச்சியான நினைவாக தொடரும்.

 

வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை வரையிலான பேருந்து பயணம், அதிகாலையின் தன்மையாலும், இடையிடை வரும் கிராமங்களும் வணபகுதியுமாக ஒரு வித மன அமைதியும் நினைவுகளையும் ஓடச் செய்து கொண்டிருந்தன. உப்பளங்களின் குவியல்கள் கோடியக்கரையின் வெண்கம்பள வரவேற்பாய் அமைய, இனிதே துவங்கியது அன்றைய நாள்.

 

IMG_20170409_090453

 

இலங்கைக்கும் தமிழகத்திற்குமான கடல் இடைவெளி குறைவாக உள்ள இடங்களில் கோடியக்கரையும் ஒன்று.. இலங்கை தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு நீர்வழி பாலமாக பல ஆண்டுகள் வரலாறு நெடுக இருந்து வரும் நிலமிது. மீன்பிடிப்பு பற்றியும், இலங்கை இந்திய கடல் எல்லை நிலவரங்கள் குறித்தும் பல வகையான படிப்பினைகளை கொடுத்தது காலையில் கடலுக்குள் படகில் செல்லும்போது , படகை செலுத்தியவருடனான உரையாடல். மீன்பிடிப்பு காலத்தின் நிறைவு பகுதியில் சென்றமையால், கரைகள் சற்றே மனித பழக்கமற்று கழுகுகளின் கண்காணிப்பில் அமைதியே தனதாய் அலைகளினூடே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

 

This slideshow requires JavaScript.

 

அடுத்ததாக, புதிய கலங்கரை விளக்கம்..புதிய கலங்கரை விளக்கமும் அதன் உயரத்தில் இருக்கும் காற்றும் பல கதைகளை பேச வைத்தன. கோடியக்கரையின் மீன்பிடி கதைகள் ஆரம்பமாய், கோடியக்கரை இராணுவ முகாம்கள்  வரை உரையாடல்கள் நீண்டன. உயரங்களின் வழியே விரியும் பார்வைகளுக்கு வார்த்தைகள் என்றுமே முழுமை கொடுப்பதில்லை என்பதை மீண்டும் நிரூபித்தன அந்த நிமிடங்கள்.

 

This slideshow requires JavaScript.

 

கோடியக்கரைக்கும் பழைய கால கதைகளுக்கும், குறிப்புகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பு, ரயில்பாதை போன்றது., ராமர் இலங்கை செல்கையில் வந்த இடம் என்ற குறிப்பு தொடங்கி (ராமரின் வனவாசத்தின் பொழுது என்ன வயதென்று தெரியவில்லை, ஆனால் கோடியக்கரையில் ராமர் பாதம் என்று கூறப்படும் பாத தடங்கள் நிச்சயமாக ஒரு சிறு குழந்தையின் பாத அளவே இருந்தது என்பது ஒரு பதிலில்லா கேள்வி!?) , சோழப்படையின் இலங்கை இணைப்பிடமாக திகழ்ந்ததாக அறியப்படும் குறிப்பும், பொன்னியின் செல்வன் பூங்குழலி சுற்றித்திரிந்த காடுகளின் அடர்த்தியும் பல கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றன..

 

This slideshow requires JavaScript.

 

வெயிலுக்கிதமான சர்பத்தும் குழகர் கோவிலும் மதிய உணவிற்கான இடைவெளியை நிரப்ப, தோழியின் வீட்டின் அன்பிலும் உணவிலும் நிறைந்தன உணர்வுகள். பயணங்கள் உணவுகள் இன்றி முழுமை பெறுவதேயில்லை அதுவும் பயணிக்கும் ஊருக்கே உரிய சில உணவுகள் பயணத்தை முழுமை பெறச்செய்கின்றன. அந்த வகையில் கோடியக்கரையில் புசித்த பால பழத்தை குட்டி சப்போட்டா என்றே கூற வேண்டும்.

 

மதிய உணவிற்கு பிறகு., சோழனின் கலங்கரை விளக்கத்தைத் தேடிச் சென்று, சுனாமியால் தகர்க்கப்பட்ட செங்கல் மிச்சங்களாக, காயல் நீருடனான நடையாக, சதுப்பு நிலங்களாக, பறவை கால்தடங்களாக, சிப்பிகளாக பல நினைவுகளை சேகரித்துகொண்டது மனது.

 

This slideshow requires JavaScript.

 

காயலுடனான நடையை தொடர்ந்து, கோடியக்கரை சரணாலயத்தில் கலைமான்களுடன் தொடர்ந்தது பயணம். வெயில் காலம் ஆனதினால் தண்ணீர் வற்றிப்போயிருக்க, மதிய வேளையில் மான்களை பார்ப்பது கடினம் என்ற தகவலுடன் சென்ற எங்களுக்கு, குறைவின்றி காட்சியளித்த கலைமான் கூட்டங்களும், பரந்தவெளியும் அழகான ஆச்சர்யங்கள்.

 

மொத்தத்தில், கோடியக்கரைக்கு என்றே உள்ள ஒருவித பன்முகத்தன்மை பல நினைவுகளையும், சிந்தனைகளையும், அனுபவங்களையும் நெடுநாட்களுக்கு தொடர்ந்து வரவைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

 

#கோடியக்கரை – கதைகளும் வாழ்வும்

 

Pics Captured using Lenovo K6 Power.

Posted in #SriScribbles, Travel and Life

காஞ்சிபுரத்துக் காற்று

தமிழில் என் முதல் பயணக் குறிப்பு.. சென்று வந்து ஒரு மாதத்திற்கும் மேல் கடந்துவிட்ட ஒரு பயணத்தைப் பற்றிய பதிவு.. பொதுவாக பயணங்கள் பற்றிய பதிவுகளை ஆங்கிலத்தில் பதிபவன் ஏன் இதற்கு மட்டும் தமிழ் என்று யோசிக்கலாம்.. பயணங்கள் ஒவ்வொரு வகை.. நாம் மட்டுமே கலந்து கொள்ளும் பயணங்கள், இடத்தின் அழகை ரம்மியத்தை அனுபவிக்கும் பயணங்கள், மக்களின் வரலாற்றை வாழ்கையை அறிந்து கொள்ள சில பயணங்கள் என பல விதங்கள் கொண்டவை. அவ்வாறான நிலையில் இந்த காஞ்சிபுரம்  பயணத்தை தமிழில் குறிப்பது மட்டுமே அந்த பயணத்தின் நினைவுகளை உண்மைபடுத்தும் என்ற நம்பிக்கையில்.,

 

எங்கள் காஞ்சிபுரம் பயணம் கிட்டத்தட்ட ஒரு பன்முகத் தன்மை கொண்ட பயணம் என்றே சொல்ல வேண்டும்.. பன்முகம் கொண்ட உணவுகளை புசித்த பயணம் என்றும் சொல்லலாம்.

 

காஞ்சிபுரம் – கோயில்களின் நகரம். பயணம் செய்தவர்களில் கடவுள் நம்பிக்கை பெரிதும் இல்லாத அல்லது அறவே இல்லாதவர்கள் அதிகம் இருந்த நிலையில், காஞ்சிபுரம், பயணத்திற்கான இடமாக முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் நண்பர்களின் வீடு. அடுத்ததாக கோயில்களுக்கும் வரலாற்றுக்கும் இருக்கும் பிரிக்க முடியா உறவு.

 

சென்னை தாம்பரத்தில் இருந்து கலையில் ரயிலேறி கிளம்பினோம் காஞ்சிபுரம் நோக்கி. ரயில் பயணங்களுக்கு என்று ஒரு வித வசீகரமுண்டு. தனியாய் செல்லும்போதும் சரி நண்பர் கூட்டமாய் செல்லும்போதும் சரி ஒரு இலகுவான  அனுபவத்தை தர மறப்பதில்லை அவை..

 

IMG_20170318_084311

 

 

காஞ்சிபுரம் ரயில் நிலையம் எங்களை அன்புடன் வரவேற்றது வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல என்பதை அந்த இரண்டு நாட்கள் காட்சிப் படுத்தியது.

 

காலையிலேயே காஞ்சிபுரம் சென்றடைந்திருந்தாலும் காலையில் தோழி ஒருவரின் வீட்டில் உண்ட மயக்கம் மதிய உணவு வரை அங்கேயே இருக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். உணவு முடித்து அடுத்த வேலை உணவுக்காக மட்டுமே காத்து இருப்பது பண்பு ஆகாது என்பதை அறிந்தமையால், அந்த நேரத்தை ஒரு குட்டி நடையும் தர்பூசணியும் கொண்டு நிரப்பினோம்.

 

தர்பூசணியும் நடையும் முடிவதற்குள்ளே  மத்திய உணவுக்கான நேரம் என்று சமையலறை வாசனை சொல்லாமல் சொன்னது.. நீந்துவதும் நடப்பதுமாக இருந்த அனைத்தும் குழம்பாய், வறுவலாய், வதக்களாய் இருக்க அள்ள அள்ள குறையாத அன்பாய் வயிற்றுக்குள் பாய்ந்தன. சில நேரங்களில் நம் நம்பிக்கையை உலுக்கும் சூழ்நிலைகள் அமைவது இயற்கையே, அப்படி தான் உணவுப்போராளி என்று நான் நம்பிய என் நண்பர்கள் சிலர் நண்டு இது வரை உண்டதில்லை என்று சொன்னது.அதையும் தாண்டி, ஒரு வழியாக இறால், மீன், நண்டு, கோழி என யாருக்கும் பாரபட்ச்சம் பார்த்து விட்டோம் என்ற மனச்சுமை வந்து விட கூடாது என்ற என்னத்தில் செய்ய வேண்டியவற்றை செவ்வனே செய்து முடித்தோம்.

 

மானை முழுங்கிய மலை பாம்பாய் உருண்டு கொண்டிருந்த அணைவரும் ஒரு வழியாக இது ஒரு பயணம் என்பது ஞாபகம் வரவே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமானோம்.

 

உள்ளூர் பெருந்தலைகள் மூவர் எங்கள் நட்பு வட்டத்தில் இருந்தமையால், காஞ்சிபுரத்தை சுற்றுவதில் அதை திட்டமிடுவதில் எங்களுக்கு சுமையே இருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வழியாக மயக்கத்தை தெளிவித்துக் கொண்டு கைலாசநாதர் கோவிலை   சென்றடைந்தோம். பல்லவ மன்னன் ராஜசிம்ஹனால் கட்டப்பட்டது என்று கூறப்படும் இக்கோவில், ஒரு வித அமைதியான ஆழ்ந்த சூழலை அந்த மாலை நேரத்தில் தந்தது. கால மாற்றங்களாலும், ஆட்சி மாற்றங்களாலும், அரசியல் மாற்றங்களாலும் பல வரலாற்றையும் அவை தந்த சுவடுகளையும்  தாங்கி நிற்கிறது இக்கோவில். எல்லா மிதமான மனநிலையிலும் நம் மனப்பொருமையை சோதிக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கும் என்பதை உணர்த்தியது கைலாசநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுடனான அந்த அனுபவம்.

 

This slideshow requires JavaScript.

 

கைலாசநாதர் கோவிலை தொடர்ந்து ஏகாம்பரநாதர் கோவிலிற்கு சென்றோம்.சற்றே பெரிய கோவில். பழைய காலக் கட்டிட கலையும், கோயில்களுக்கே உரிய வாசனையும் ஒரு வித அமைதியை மீட்டுக் கொடுத்தன. இருப்பினும் கடவுளும் மதமும் அவை தரும் வீண் கௌரவமும் என்றும் மனிதனை மனிதனாக வைத்திருக்காது என்பதற்கு சான்றாய் அங்கேயும் ஒரு நிகழ்வு நடந்தேறியது.

 

நண்பர்களுடன் செலவிட்ட அந்த நிமிடங்கள் மெல்லிய காற்றாய் வீசியபோதும், கோவில்களில் எதிர்கொண்ட நிகழ்வுகள் மனதினுள் சுழலை ஏற்படுத்தியதையும் மறுக்க முடியாது. சுழலை கட்டுப்படுத்த அணை வேண்டுமே, வந்தது அணை மீண்டும் உணவாய்.இரவு உணவிற்கு நண்பன் ஒருவனின் வீட்டிற்கு சென்றிருந்தோம். காஞ்சிபுரத்திற்கே உரித்தான கோயில் இட்லியும் நண்பன் வீட்டு அன்பும் அலைந்த எண்ணங்களுக்கு அணை கட்டின. உணவிற்கு பிறகு நேரம் நகர்வது உணராது அரசியல், வரலாறு, இலக்கியம், வெட்டிக்கதை என நீண்டது.

 

முதல் நாளின் மணித்துளிகளில் உணவு பயணத்தை வென்றுவிட, இரண்டாம் நாள் பயணத்திற்கு சமபங்கு அளிக்க வேண்டும் என உறுதி கொண்டோம். இரண்டாம் நாளின் முதல் அனுபவமாக வைகுண்ட பெருமாள் கோவில். கோவில்களின் கட்டிட கலையும் அமைதியும் அனுபவிப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்னை பொறுத்தமட்டில். ஆனால், பொருளாதார சமூக படிநிலைகளுக்கேற்ப மக்கள் இன்றும் கோயில்களில் நடத்தப்படுவது ஒரு வித வெறுப்பை மட்டுமே விட்டுச்செல்கின்றன.

 

This slideshow requires JavaScript.

 

எவ்வளவு தான் உறுதி கொண்டாலும் உணவை கண்ட மனம் கேட்கவா செய்யும்? இரண்டாம் நாள் காலை உணவு மற்றொரு நண்பன் வீட்டில். காஞ்சிபுரத்தில், வந்ததிலிருந்து கோதுமை சம்பந்தப்பட்ட உணவை சாப்பிடவில்லை என்ற என்னத்தை பூரி கொண்டு நிரப்பியது காலை உணவு.

 

அடுத்ததாக, ஜெயின் காஞ்சியிலுள்ள திருபருத்திகுன்றம் ஜெயின் கோயிலுக்கு சென்றோம். ஜெயின் கோயில்களுக்கென ஒரு தனி அமைதி இருக்கத்தான் செய்கிறது. காஞ்சியில் நாங்கள் செலவிட்ட இரண்டு நாட்களில் மனதில் வெறுப்பை ஏற்படுத்தாது இருந்த ஒரே கோயிலும் அதுவே. புகைப்படங்கள் வேண்டாம் என ஆரம்பத்திலேயே கேட்டுக்கொண்டதால் நாங்களும் கோயிலுக்குள் புகைப்படங்கள் எடுக்கவில்லை.

 

IMG_20170319_104121

 

வெயில் சுட்டெரித்தாலும் காஞ்சிபுரத்தை சுற்றாமல் போவதில்லை என்று மாமண்டூர் குகைகளை நோக்கி நகர்ந்தது எங்கள் பயணம். அந்த குகைகள் பாறைகளூடே நடக்கும் போது கடந்த காலங்களில் மக்களின் வாழ்க்கையை நினைத்து பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

 

This slideshow requires JavaScript.

 

குகைகளினூடே சென்ற பயணத்தை திசை திருப்பி, மீண்டும் நண்பனின் வீட்டை நோக்கி பயணமானோம்.வீட்டை சென்றடைந்த எங்களை வரவேற்றது பிரியாணியும் மீன் வருவலும் (சைவ உணவும் இருந்தது, ஆனால்!?).உணவிற்கு பிறகு நண்பனின் சிறு வயது புகைப்படங்கள் கிடைக்க சிரிப்பாலும் விளையாட்டாலும் அதிர்ந்தது வீடு.

 

காஞ்சிபுரத்து புடவை வாங்க வேண்டும் என்று எண்ணிய தோழிகள் சிலர், எங்கள் முகங்களுக்காக அவற்றை கிடப்பில் போட, ஒரு காவியத்தை பார்க்கும் முடிவிற்கு வந்தோம்., பார்க்கவும் செய்தோம். புடவை வாங்க சென்றிருக்கலாம் என்று எல்லோர் மனதிலும் நிச்சயம் ஒரு முறையேனும் தோன்ற வைத்தக் காவியம்.

கோயில்களின் சூழல்கள், நண்பர்களுடனான எல்லையற்ற விவாதங்கள் என பலமுகங்களை இரு நாளில் கொடுத்த நிகழ்வாய் அமைந்தது பயணம். காஞ்சி, சிவ வைணவ ஜெயின காஞ்சியாக பிரித்து நிர்வகிக்க பட்ட வரலாறும், மனதிற்கும் வயிற்றிற்கும் நிறைவும் என எல்லாமும் கொண்டிருந்தது காஞ்சிபுரம்.

 

IMG_20170319_092229

 

இரண்டு நாட்களே ஆயினும் பல அனுபவங்களையும் நினைவுகளையும் தந்த காஞ்சிபுரமும், நட்பும், குடும்பமும் என்றும் ஒரு உணர்வாய்  அடுத்த இரண்டு மணி நேர பயணத்திலும் அடுத்த நாட்களிலும் தொடர்ந்தது.

 

#காஞ்சிபுரம் – உணர்வும் கலையும்
Photos using Lenovo k6 power.

Posted in #SriScribbles, Travel and Life

Puliyancholai and the pebbles

 

The trips like the one to Puliyancholai are the ones that make you believe that trips are not about the length but the experience that you have at the end of it. Puliyoncholai, located at the foot of Kollimalai is accessible from Trichy, Namakkal and Karur equally. We reached Puliyancholai via Trichy. Located at round a 2 – 2.30 hours of bus journey from Trichy, the place would be a reason of envy to all who loves walking and trekking through the woods with no much expectations.

 

IMG_20170309_170721

 

Starting at around 02.00PM from Trichy, we were misled in timing by yet another Puliyancholai which was at a distance of one hour travel. Later did we realise that the destination we were after is much more distant than the one we were considering for all the planning. The plan was to reach Puliyancholai, have a good time at the falls as a remedy for the rising temperature of Trichy and get back to Trichy to board our bus back to Chennai.

As the bus we were on neared the spot, we were presented with a disappointment in the form of words from the bus conductor. We were informed that we have come to the wrong end of Puliyancholai, given the minimal amount of time that we had and we should walk for 4 hours to even reach the falls. Hiding the disappointment, and with an open mind (we could say blank!) we started towards the pathway which seemed the trekking trail.

The initial scenes on the trail was not that encouraging in a place where we wanted to have a dip in the water. But, as we progressed with the walk, streaks of streams started showing up their presence. Though the amount of water at places were good enough in amount to take a dip, we decided against it for some strange reason (May be the mud-ish colour of the water!?). Of all, Puliyancholai is one of the places least affected by the commercial buzz adding a strange beauty to the place.

 

This slideshow requires JavaScript.

 

The hops through the pebbles of all sizes, with the sound from the constant flow of stream ringing through the air, with the evening sun setting the mountain scene on a warm and subtle fire, one could never help getting lost in thoughts. The tranquillity amidst the flowing streams and the tweaking of tree branches by the wind can never be measured.

 

This slideshow requires JavaScript.

 

It is still a puzzle how the path through the woods can seem to go on forever when you are into your own thoughts. The silence and energising aroma of the woods some or the other way attracts one deeper into itself.

There are moments that you expect time to expand without ends, but unfortunately snap out of it to the calling of life of the cities. We made our transcend down to a rising moon making all possible shades of blue.

 

IMG_20170309_185416

 

Given that the next bus from the place was 2 hours from the time we reached the stop, we decided to get a cab for the nearest hub with better bus connectivity. The waiting period until the arrival of cab was filled with a tense situation of the locality, strange rings of air and the shades of blue.

#Puliyancholai – Woods and pebbles

 

Pics taken using : Lenovo K6 Power

Posted in #SriScribbles, Travel and Life

Delhi and the Buzz

Though the primary place of visit was Delhi, the time we had to experience Delhi was very minimal. The first thing that we can relate to in Delhi is the fast paced life that everyone seem to have. Given the running and jumping that we had, it looked even more hastier.

 

IMG_20170227_125102

 

We had only the leverage to experience Delhi metro between Delhi Aerocity and New Delhi , the streets, platforms of New Delhi railway station on Sunday as part of Delhi. First half of second day passed along with the official work. So, we had exactly half day in Delhi before our flight back to Chennai at 8.20 PM.Given the aid of google maps, we made a rough plan by which we can visit places that are located near to each other.

First place to visit was the India gate. Pani puri along roadside shop threw the best possible welcome party at the India gate. North India and Pani puri does have an emotional connection of taste. India gate being an high smoothly polished building, has the fire beneath it as the Amar Jawan reminding the endless roughness that people have suffered as a result of war. It has the names of all the those soldiers who lost thier lives in wars known and unknown as inscriptions.

 

This slideshow requires JavaScript.

 

The path all around the India gate and the route towards the parliament block and Rashtrapathi Bhavan (President’s office) from India gate have well maintained greenery in the name of trees, roadside parks and wide roads. The prime offices of India built post the decision of capital shift from Calcutta to Delhi during the 1910s has a blend of architectural structures.

 

This slideshow requires JavaScript.

 

Next on the plan was Red fort, unfortunately we were informed that Red fort is closed for visitors on Monday.We started by walk to visit Jamma Masjid. Built during the reigns of Shah Jahan, it is primarily made of red sandstone with a fair usage of white marbles. The mosque was originally called Masjid-i-Jahan-Numa, meaning ‘mosque commanding view of the world’. The Mosque does stand very much above the current ground level. It also makes on wonder on how tall it would have been above the ground level during it’s construction. Another notable part of the place is the the number of eagles that fly very close to our head.

 

This slideshow requires JavaScript.

 

Walking through the streets from Jamma Masjid to Chandini Chowk, one could easily relate to the antiques of the place. The old styled buildings, few still maintained and few replaced adds an insight into the changes the people have gone through. The food especially sweets, chats and the dhabbas providing thali are definitely a treat to any foodie.

Chandini chowk is one of the oldest and busiest markets in India built during the reigns of Shah Jahan, designed by his daughter Jahanara. Once regarded a place of silver merchants and princely processions, Chandini chowk is now an busy wholesale and retail market. Walking through the streets of Chandini chowk, Sadar Bazaar provides a whole lot of thought process. The unique battery auto rickshaws is one of my favourite of the place. Special mention has to be given to the accuracy of their driving given the heavy traffic. By the trips I have taken with those autos, they never seem to apply brakes but still manage to control the drive.

 

IMG_20170227_171224

 

There are a few things that is very much to the place. Almost everyone wears a shoe ( In place of slippers and sandals) of some kind, use of blazers being common are few of those that stand out from the South where these are rare sightings in a common man for a variety of reasons.It is a bit disturbing to know that still hand pulled rickshaws exists for human transportation which has been abolished in Thamizhnaadu. It even hurts when a aged person pulls a cart of young well built people through the busy overcrowded streets. It is high time, the people and government think about it and do things for the betterment of rickshaw pullers from a humanity perspective at the least.

With all these experiences at Agra and Delhi, the return back to Chennai was evenly a fast paced story. But running through all these experiences again and again pauses at a place of two paced life cycle of metro like Delhi, where part of the region is well maintained with wide roads and well maintained plans and the the other part is left least attended. The life of the common people living in those least attended places does strike hard a number of questions on what a common man has got from monarchy and electoral politics alike. Overall, Delhi does give a feel of history with the present.

 

Pics Captured using: Lenove K6 Power

Posted in #SriScribbles, Travel and Life

Agra and the Adoration

Accidental trips always leave a lasting impression. The latest trip to Delhi for a short official note was one such. Apart from all those Hindi movies and articles one gets to read, this was the first time I was in North India.Though a very short span of one and half days to roam around apart from the official reason, it was very much occupying just like any fast paced movie. Though, it was a very short trip, I believed this to be a longer post so decided to split the experience..

IMG_20170226_161132

Reaching Delhi on a cold Sunday morning and checking into the hotel, the plan was to try get to Agra to get a glimpse of Taj Mahal at the least. Ya, try is the word! As we were literally running through platforms and streets to catch trains and metros to stay on time to make the try seem sensible. With a 3 hours train from Delhi, we had literally crossed 3 states on the way to reach Agra. We reached Agra almost for lunch. The first encounter of a native in Agra was of the auto driver who offered different possible combos that we can use to roam around Agra. With the limited time we had (Keeping in mind the need to return to Delhi for Mondays work), we tried convincing the person to a drop at Taj Mahal with the slightest of Hindi we knew(Not to forget the on the way spicy, tongue lingering lunch at one of the hotels suggested by the auto driver)

Once we reached Taj Mahal, there were a buzz of kids selling white bundles asking us to buy them as it is mandatory to wear them over shoes to get on the main Taj Mahal building. Starting with a bid price of 20 rupees for a pair, we were offered it for an end price of 5 rupees a pair by another kid. Though the distance from the main gate to the nearest entry place for the main building is walk-able, we decided to get one of those battery autos to keep in track with the time factor.

Being a Sunday, the place was full of people. One could literally hear almost all languages spoken all around India at a single place. At times, it even felt if I was hearing more of Thamizh, Telugu and Malayalam.May be I was hallucinating!

Following a strict security check and a very long queue, we were through. The Taj Mahal is guarded by the huge “Darwaza-i rauza” or The Great Gate in the south. Darwaza serves as the entry point. The high archways has indeed earned the gate it’s name.

This slideshow requires JavaScript.

The pathway from the Darwaza to the main complex of Taj Mahal, could easily be a relaxing walkway on any evening. The pathway with a pool in the centre surrounded by a well maintained plantation provides a symmetric add – on to already a symmetric wonder.

IMG_20170226_161417

The Taj Mahal is guarded by two identical buildings built of red sandstone to the east and west. Historians claim the western one to be a mosque and the eastern one to be a guesthouse.

IMG_20170226_164727

The only open part of the whole structure with no much buildings is the north, where the Taj Mahal is banked by the Yamuna. The whole Taj Mahal complex is built way above the river banks. The view of Yamuna on a setting sun with the evening North east wind blowing through your face is indeed an experience to cherish. Though, the Yamuna seemed to be having a dwindling water supply, still it looked quite a view under the glimpse of evening sun.

This slideshow requires JavaScript.

The main complex – Taj Mahal, the most worked upon and beautified tomb, a symbol of adoration, a symbol of hard work, a symbol of craftsmanship stands tall with bright white marbles chiselled and painted to perfection with representation of flowers, patterns and poems. It is believed that the later British empire had removed most of the priceless stones used in the building.Of all, the height of the structure is what make one feel awe. Building large structures in times of lesser technology definitely shows the mettle of yesteryear craftsmanship.

This slideshow requires JavaScript.

The inner part of the Taj Mahal is made of archways as believed to be the trademark of Mughal architecture. The core of the building where the grave of Mumtaz Mahal and Shah Jahan is reported to be present is covered with the same white marble but with a lesser decoration. Historians believe the lesser decoration owing to the religious belief possessed by the Mughals.

This slideshow requires JavaScript.

Though Taj Mahal stands the time as a testimony of adoration, craftsmanship, detailing, yesteryear architecture and Shah Jahan, it is not easy to neglect the hard work put in by thousands of craftsman and people alike. Being built in an era of monarchy, the question of ordering people to built a giant structure for a lone man’s desire lingers throughout the mind as we departed from Taj Mahal and Agra in the same fashion we arrived from Delhi with the help of a humble auto driver, who resembled one of those common man who is least benefited by the architectural awesomeness of structures build to please the rulers.

Photos Captured with : Lenovo K6 Power

Posted in #SriScribbles, Travel and Life

Vedanthangal – And the wings

At times time looks a very volatile factor. The speed at which time fleets is so quick that makes one wonder if we are late. Yes., this partial travelogue is one such. Partial travelogue for the travel in time than distance.

I am one of those persons, who can not shift gears into a celebration mode just because it is January 1 and the rest of the world is going upside down. For the past few years, New year day has been a day of total shut down for my system where in I sleep for near 24 hours. But , this year the system was up and literally running for almost 24 hours.

The new year started by watching a classic comedy movie “Ruggles of Red Gap” along with very few friends at Panuval book store, Thiruvanmiyur which definitely was an experience of its own kind. With the thought provoking satirical comedy playing at the back of our mind, Myself and one of my friend started back to room by 02.00 AM. We had planned an ad-hoc plan to be on the roads the whole next day. So the plan was to start from my room at 05.30 AM. As with all plans that we make, we started well in delay at 07.30 AM from my room.

I never believed that I would love riding bike for longer duration until January 1′ 2017. Though, the plan was to head towards Vedanthangal which is almost 80 odd KM from the place I stay, it was nevertheless the first long distance solo in my bike with no reason.

 

This slideshow requires JavaScript.

 

Though, I have been travelling through the same highway often for the past few years by bus, I have missed noticing quite a few along the road. The small green hills, the drilled hills that make the road, the river and even more. The early morning breeze and the road with trees on both sides provided the much required comfort.

We had breakfast at Padalam Koot road., and reached Vedanthangal by 09.30 AM. Vedanthangal is one of those smallest sanctuaries which at times make you wonder if it is a sanctuary or a park. The water bird sanctuary is cleanly maintained along the banks where common visitors are allowed. The banks with trees all around, had a relaxed feel to it.

 

This slideshow requires JavaScript.

 

We being there with no much plan entered the sanctuary with just our mobile cameras and a DSLR, which was in no way a match to those rented binoculars in aiding bird watch.If one has to visit Vedanthangal for the pure love of ornithology, it is good to carry a binocular / get a rented binocular / carry a DSLR with higher zoom lens configuration.

 

This slideshow requires JavaScript.

 

After spending a few hours on the pavements watching birds as much possible with our naked eye and gadgets that we possessed, we decided to start back. On the way, at the moments decision, we decided to watch Dangal movie at Laurel C3 Cinemas at Chengalpattu highway.

 

As soon as the movie was over by 05.30 PM we headed back on the road, with no much plan as always. The setting shiny orange sun rays, wide highways , breezy wind is a wonderful combo to experience. Surprisingly, this kind of an scenario makes a person lose track of time by sitting for hours staring at the rays . The view of sun rays outlining the hilly projections that serve the banks of dried up Paalaaru was quite a view. The view of a huge river trial with no trace of water whatsoever rises lot of questions within one which very much relates to human life as well.

 

This slideshow requires JavaScript.

 

After spending time by the roads on the highway until it was dark enough to have no more sun, we started back to room with lots and lots of thoughts of a day that had all ranging from Midnight move screening to the early morning breeze to the visiting winged visitors to the movie on the highway and last but not the least the dissolving moments spent along the setting sun.

Bird Pictures Taken by Canon D 100 (Courtesy Sivamaharajan)

Other Pics taken by Sony Xperia E.

Posted in #SriScribbles, Travel and Life

Munaar – A trip of turns

 

I am at a stalemate on starting this particular write up. Should I say “Finally a trip to Munnar!” or “Finally, a trip!” ?. Huh!, A long due’d trip of three years. The plan started three years back with 4-5 people, had it’s own on-off discussions and finally, out of a spark and an ensemble group of friends the trip finally became real.

Personally, it has been around 4 years since I had been majorly involved in preparing for a trip, stuff which I have enjoyed always. This time it was a bit different , with more unexpected events on offer.

With a two hour delayed start on 23rd December evening, the trip was mostly filled with chats that extended through the night. It is always mesmerising to get to know the way others feel from their own shoes, and of all getting into their world described in their own words. The whole two days would stay memorable for each of us for the very reason.

We reached Munaar a bit(!?) late on day one, in fact we literally didn’t reach Munaar on day one. We decided to take – in the experience as it presents itself. We reached Anayirangal dam well around noon. Anayirangal as the word means – “Anai – Elephant , Irangal – Getting down” is known for wild elephants descending down for water. We being there by noon had to settle for the experience of walking around the hilly surface of dried up catchment area and a breezy lake. Nevertheless, it was quite a pleasant combination of natural and artificial influence.

 

This slideshow requires JavaScript.

 

We reached our cottage by 3.30 PM and had the trademark matta rice meals. With dusk chasing us at the background, we had to chose between visiting a cultural show and then taking up a safari or just visiting the show. Given the prolonged travel, we decided to visit only the show. We wanted to witness Kathakali from its making stage, but unfortunately we had to miss it owing to the time constraint. We opted for a show on Kalaripayattu (Traditional martial art form). The show was one of an experience, with adrenaline flowing throughout. It had a fair share of ah’s and ooh’s and over all a chance to witness the richness of kalaripayattu.

 

Post the show, we had a brief walk around the place and had a very heavy dinner at a restaurant with the menu swapping between chicken curry to beef curry and back. The day ended (did it?) with a little camp fire and lot of talking ranging a various armoury of thoughts.

We checked out of cottage by 7.30 AM the next day, and headed to Munaar. The road from cottage to Munaar got more and more pleasant with every passing kilo meter. The layered tea estates to the deep running streams to the calm and composed misty mountains, it was absolute tranquillity.

 

This slideshow requires JavaScript.

 

We had close to 90 minutes travel amidst the serene view before reaching top station, known as the highest point of Munaar. The altitude view from top station was breath taking as expected along with the trekking trails. The view of elegant mist fighting it out with the humongous mountains has it’s own inferences depending on the viewer. The trekking trails, though man made had a strange ring to it. Though short spanned, the walk through the trekking trails did challenge one’s own physical and mental strength.

 

This slideshow requires JavaScript.

 

With almost on track with the plan on day two, we were presented with an unexpected breakdown of our cab at a crucial curve and absolutely no signal on our mobile phones added thrill to the whole travel. We, acted as a chain of traffic police to ease the vehicles passage through the narrowed path( courtesy our cab!) definitely added an experience to cherish. The experience post the breakdown would make a successful script for any high pulse movie. Right from the experience of having bread omelette on the roads, bike travel to and fro to find a mechanic will remain etched in memory forever. The cold breeze and the approaching chill of the night added to the adrenaline of having a broken down vehicle. Finally, we decided to cut off the vehicle and travel back to Chennai by bus as few of us had to reach early the next day to be in time for office.

We boarded a moderately crowded  bus to Munaar town, bought few home made chocolates and tea we could afford (courtesy demonetisation!?) upon reaching Munaar. With a little help from a friend at Munaar, we managed to get a jeep to Theni. With average travel timing between Munaar and Theni stated at 3 hours, we were at odds in boarding the last bus from Theni to Chennai at 11.00 PM. We started from Munaar by 8.30 PM , with the jeep driver cruising through every curves and bumps as if there was no need for applying brakes. The feeling of sitting inside a jeep at speed of that kind, especially on the back most seat is an experience that can never be represented in words. Only one could imagine , what our jeep travel would have been with us reaching Theni in 1 hour 45 minutes and thereby well ahead of the bus to board.

With lot of adrenaline, arguments and laughs easing out, we started our journey back to Chennai with an unique experience full of turns and flavours.

PICS captured using Sony Xperia E.