Posted in Politics, Society

மாற்று

மாற்றம் ஒன்றே மாறாதது. இது பழ காலமாக வழங்கப் படும் ஒரு வழக்கு. வாழ்வியல் ஆனாலும் சரி உணவு முறை ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அம்மாற்றதை தடுக்கவோ புறம் தள்ளவோ முடியாது.

அரசியலில் கருத்தியல் மாற்றம் செயல்முறை மாற்றம் ஆகியவை புதியவை அல்ல. காலம் காலமாக இயங்கி வரும் இயக்கங்களுக்கு உள்ளோ அல்லது அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபாடு அடைந்தோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. திராவிட இயக்கங்கள் இதற்கு விதவிலக்கல்ல. நீதிக்கட்சி தொடங்கி இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கழகங்கள் இயக்கங்கள் வரை எல்லாம் இதற்குட்பட்டே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த மாற்றம் எந்த சூழலில் எந்த அளவில் நடக்கிறதோ அதுவே இது இயங்களுக்கு உள்ளே நடக்கும் மாற்றமா வெளியே நடக்கும் மாற்றமா என்று முடிவு செய்யும். சுற்றமும் சுழலும் நெறிப்படுத்த அதை உள்வாங்கிக் கொண்டு தகவமைத்துக் கொள்ளும் இயக்கங்கள் இருக்கும் வரை இந்த மாற்றம் என்பது இயக்கங்களுக்கு உள்ளே நிகழ்ந்து கொண்டே இருக்கும். என்று இயக்கங்கள் தன்னை தகவமைக்க மறந்து திறனாய்வு செய்தலை மறந்து தேக்கம் அடைகிறதோ அன்று தொட்டு இயக்கங்களின் வெளியே அந்த மாற்றை சமூக தேடும். உருவாகும்.

ஆம், அரசியல் இயக்கங்கள் தோன்றுவது மறைவது திரிவது அனைத்தும் சமூகத்தால், மக்களால் ஏற்படும் அழுத்தத்தால் அதை ஏற்படுத்தும் சூழல் மட்டுமே. இங்கு தனி மனிதர்க்கு இடமில்லை. ஏன் ஒற்றைச் சிந்தனைக்கு கூட இடமில்லை.

தமிழக அரசியல் சூழலில் இன்றளவும் நடந்து கொண்டு இருப்பது இயக்கங்களுக்கு உள்ளே ஆன மாற்றங்கள் மட்டுமே. அனேக மக்களின் தேவைகளை ஈடுகட்டுவதற்கான புற அரசியல் மாற்றமும் அணிந்திறல்தலும் முக்கால் நூற்றாண்டிற்கு முன்னமே இங்கு அரங்கேரிவிட்டது. இன்று இங்கு செயல்பட்டு கொண்டு இருக்கும் பிரதான கட்சிகள் தொடங்கி சிறு இயக்கங்கள் வரை எல்லாமும் அந்த முக்கால் நூற்றாண்டு மாற்றத்தின் நீட்சிகளே. இப்படி இருக்கையில் இங்கே மீண்டும் ஒரு புற அரசியல் மாற்றம் ஏற்பட காலம் சில ஆகலாம்.

இதில் இருக்கும் அடுத்த கேள்வி, முன்வைக்கப்படும் அனைத்தும் மாற்றதிற்கானவையா என்பதே. இதற்கான பதிலை இன்று இருக்கும் இயக்கங்கள் தன்னகத்தே கொண்டுள்ளது.  தான் தாங்கி வளர்ந்த கொள்கைகளில் இருந்து பிறழும் பொழுதும் மக்களின்-சமூகத்தின் குறளை அலட்சியப்படுத்தும் பொழுதும் மாற்றத்ிற்கான தேடலை சமூக வெளியில் தேட ஆரம்பிக்கிறது. இதற்கு மாறாக செயல்பாட்டில் இருக்கும் இயக்கங்கள் தன்னை தகவமைத்துக் கொண்டு இருக்கும் பட்சத்தில், முற்றிலும் வேறான அந்த கால சூழலில் குரலாற்றிருக்கான ஆதரவாய் கருத்தியல் முன்வைக்கப்படுமே ஆயின் சமூகம் அதை நோக்கி நகரலாம்..

இன்றைய நிலையில் தமிழகத்தில் வைக்கப்பட்டு கொண்டு இருக்கும் மாற்று யாவும் கொள்கை அல்லாமல் நிர்வாக மாற்றாக மட்டுமே வைக்கப் படுகின்றன. நிர்வாக மாற்று என்பது குறுகிய கால தேவை.அதை யார் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். தன்னை சுய பரிசோதனை செய்யும் இயக்கங்கள் யாவும் இந்த மாற்றத்தை அக மாற்றமாக உள்வாங்கிக் கொள்ள முடியும். உள்வாங்கிக் கொண்டும் இருக்கின்றன. இதை கடந்து சித்தாந்த மாற்றமாக இன்றளவில் வைக்கப்படும் மாற்றங்கள் முன்னோக்கி செல்லமால் முக்கால் நூற்றாண்டு பிண்ணிழுத்து கொண்டு செல்பவையாகவே இருக்கின்றன.

நம் சமூகத்தை அடுத்த பெரும் பாய்ச்சலுக்கு இட்டு செல்லும் கருத்தியல் மட்டுமே மாற்றத்தை தரும். மற்றவை அனைத்தும் மண்ணில் கரைந்து போன துகள்கள் மட்டுமே.

Author:

Simple yet complicated..

Leave a comment